கோயம்புத்தூரில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) சர்க்கரைக்கரும்பு இனப்பெருக்க நிறுவனம் (SBI) “ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான் புரஸ்கார் – 2025” என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது. “விவசாயம் மற்றும் இணைந்த துறைகளில் புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற பிரிவில் வழங்கப்பட்ட இந்த விருது, மண் ஈரப்பதத்தை துல்லியமாக அளக்கும் சாதனத்தை உருவாக்கியமைக்காக வழங்கப்பட்டது. இந்த சாதனம் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையை மேம்படுத்துவதுடன், உற்பத்தி திறனையும் உயர்த்த உதவுகிறது.
இந்த சாதனத்தை உருவாக்கிய குழுவில் டாக்டர் கே. ஹரி, டாக்டர் டி. புத்திர பிரதாப், டாக்டர் பி. முரளி, டாக்டர் ஏ. ரமேஷ்சுந்தர் மற்றும் டாக்டர் பி. சிங்காரவேலு ஆகிய விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். மண்ணின் மின்கடத்துத்தன்மையைப் பயன்படுத்தி ஈரப்பதத்தை கண்டறியும் இந்த சாதனம், நீர் பயன்பாட்டை சுமார் 15 சதவீதம் குறைத்து, சர்க்கரைக்கரும்பு விளைச்சலை ஏக்கருக்கு சராசரியாக 6 டனிலிருந்து 6.5 டனாக உயர்த்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பிரியதர்ஷினி .ஆ