இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை பெற்றதுடன், 64,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். இது நாட்டின் இளைய தலைமுறையின் ஆற்றலும், புதுமை சார்ந்த எண்ணங்களும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. தொழில்நுட்பம், ஃபின்டெக், ஹெல்த்-டெக் மற்றும் இ-காமர்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளம் நிறுவனங்கள் தீவிர வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்நிலையில்தான், அரசு மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் இளம் நிறுவனர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றன. இளைஞர்களின் புதிய முயற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், இவர்களது பங்களிப்பு வேலைவாய்ப்பு உருவாக்கம் மட்டுமல்லாது, நாட்டின் புதிய பொருளாதார உருவாக்கத்துக்கும் துணை புரிகின்றன. இது, இந்தியாவின் “ஸ்டார்ட்அப் இந்தியா” இயக்கத்திற்கு புதிய ஊக்கமாகவும் அமைகிறது.
பிரியதர்ஷினி.ஆ