உத்தரகண்ட் அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வெப்ப ஆற்றல் கொள்கை வெளியிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி ஆதாரங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்த கொள்கை, ஹிமாலயப் பகுதிகளில் காணப்படும் இயற்கை வெப்ப ஆதாரங்களை பராமரித்து, சுற்றுச்சூழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க நோக்கமிடுகிறது. வெப்பஆற்றல் ஊடாக மின் உற்பத்தி செய்யும் முயற்சியுடன் மாநில அரசு, இந்தியாவின் நிலையான ஆற்றல் இலக்குகளை அடைய துணைபுரிகிறது.
இந்த புதிய கொள்கையின் அடிப்படையில், வெப்ப ஆற்றல் வளங்களை கண்டறியும், அங்குள்ள சுற்றுச்சூழலைக் காக்கும், மற்றும் சொந்த தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி செய்யும் பணிகளில் முதலீட்டாளர்கள் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர். இது ஊரக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் சுறுசுறுப்பான தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும். உத்தரகண்டின் வெப்ப ஆற்றல் பசுமை வளர்ச்சி பாதையில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
பிரியதர்ஷினி .ஆ