இந்தியாவில் உருவாக்கப்பட்ட யூனிபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) செயலி, டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான நிதி பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் தளர்ந்து, டிஜிட்டல் பாங்கிங் வசதிகள் அதிகரிக்க உள்ளன. இம்முன்னெடுக்கல், இந்தியாவின் வளர்ந்த நிதி தொழில்நுட்பத்தை உலக நாடுகள் ஏற்கத் தொடங்கியுள்ளதற்கான மற்றொரு முக்கிய அடையாளமாகும்.
யூ.பி.ஐ பயன்பாட்டின் மூலம், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள இந்தியர்கள், வணிகர்களும் பொதுமக்களும் வேகமான மற்றும் பாதுகாப்பான பண பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். இது பன்முக நலன்களை ஏற்படுத்தும், சிறிய வணிகர்களுக்கும் தொழில் தொடக்கத்துக்குமான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், இந்த ஒத்துழைப்பு, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும், உலகளாவிய நிதி சீரமைப்பிற்கும் வழிகாட்டியாக அமையும்.
பிரியதர்ஷினி .ஆ