தமிழ்நாடு அரசு வெப்பச்சுமை பாதிப்புகளைக் கண்காணித்து தடுக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் வெப்பச்சுமை வரைபடத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சி நகரப்பகுதிகளில் அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படும் உடல் பாதிப்புகள், நீர் பற்றாக்குறை மற்றும் வேலை நேர குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து திட்டமிட உதவுகிறது. மாவட்டங்கள் வாரியாக, வெப்பநிலை பரிமாணங்கள், மனிதநேயம் சார்ந்த தாக்கங்கள், மற்றும் வளங்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் வெப்பச்சுமை மையங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இத்திட்டம் ஊரக மற்றும் நகர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் இணைந்து வெப்ப அச்சங்களை குறைக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. மேலும்இது, காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முயற்சிக்கு ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
பிரியதர்ஷினி .ஆ