2025 ஜூன் 30 அன்று மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில் (Financial Stability Report), இந்தியாவின் நிதி அமைப்பு வலுவாகவும், பொருளாதார சவால்களுக்கு எதிராக நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. 46 முக்கியமான திட்டமிடப்பட்ட வங்கிகளின் (Scheduled Commercial Banks) மொத்த செயலிழந்த கடன் விகிதம் (Gross NPA ratio), 2025 மார்ச்சில் 2.3% ஆக இருந்தது. நடுநிலைச் சூழ்நிலையில் இது 2027க்குள் 2.5% ஆகவும், கடுமையான சூழ்நிலைகளில் 5.3% முதல் 5.6% வரை உயரலாம் என முன்நோக்கிய மதிப்பீடு தெரிவிக்கிறது. இதே நேரத்தில், வங்கிகளின் மூலதனச் சமப்படுத்தும் விகிதம் (Capital to Risk-weighted Assets Ratio – CRAR) 2025 மார்ச்சில் 17.2% ஆக இருந்தது, மற்றும் எதிர்காலத்திலும் இது சீராக நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், குறிப்பாக கிரெடிட் கார்டுகள், நுகர்வோர் கடன்கள் மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் துறைகளில் வர்த்தக தவறுகள் (Retail delinquencies) அதிகரித்து வருவதை மத்திய வங்கி கவலையுடன் பதிவு செய்துள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட கடனாளர்கள் அதிகக் கடனுக்கு ஆளாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. குடும்பக் கடன் (Household debt), 2025 மார்ச்சில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) நேர்மாறாக 41.9% ஆக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகவே இருந்தாலும், அதன் நிதி உறுதியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவையை RBI வலியுறுத்தியுள்ளது.
பிரியதர்ஷினி .ஆ