மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாலின பட்ஜெட் அறிவு மையம் (Gender Budgeting Knowledge Hub) என்ற டிஜிட்டல் தளத்தை, மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்கள் புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய ஆய்வுக்கூட்டத்தின் போது தொடங்கி வைத்தார். இந்த தளம், மத்திய மற்றும் மாநில அரசுகள், துறைகள் மற்றும் பிற பங்குதாரர்களை பாலின உணர்திறனுடன் கூடிய பட்ஜெட் தயாரிப்பு மற்றும் செயல்படுத்தலில் வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளம், பாலின வாரியாக பிரிக்கப்பட்ட தரவுகள், சிறந்த நடைமுறைகள், பயிற்சி கையேடுகள் மற்றும் செயல் திட்டங்களை கொண்டதாக உள்ளது. இது 45க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள், 20 மாநில அரசுகள், ஐநா பெண்கள் (UN Women), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பங்குதொடர்புகளை உள்ளடக்கியது. ‘விகசித் பாரத் @2047’ என்ற தேசியக் கண்ணோட்டத்திற்கேற்ப, வலிமையான மற்றும் உணர்திறனுள்ள பாலின பட்ஜெட்டிங் முறையை உருவாக்கி, அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த மையம் செயல்படுகிறது
பிரியதர்ஷினி .ஆ