தூத்துக்குடி புனித மேரி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், மாணவிகளின் தொழில்முகக் கல்வி, திறன்கள் மேம்பாடு மற்றும் எதிர்கால வேலையொட்டித் தயாரிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் நோக்குடன், Littoral Familiarisation Program மே 19 மற்றும் 20ம் தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மே 27ம் தேதி மேலும் ஒரு அமர்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், இன்றைய வேகமாக மாற்றம் காணும் தொழில்நுட்ப உலகில் அதிக தேவைகலுடன் வளர்ந்து வரும் துறைகளில், மாணவிகள் தேவையான அறிவும், செயல்முறையிலும் திறமையும் பெற்றுத் தயாராகிக் கொள்வதற்கான வழிகாட்டலாகும். லிட்டோரல் அகாடமி, பின்வரும் பாடநெறிகளை மாணவிகளுக்காக வழங்க உள்ளது:
– UPSC தேர்விற்கான தயாரிப்பு
– ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிக் கற்பித்தல
– CA Foundation பயிற்சி
– செயற்கை நுண்ணறிவு (AI)
– டிஜிட்டல் மற்றும் எதிர்கால ஊடகத் தளங்கள்
– ட்ரோன் தொழில்நுட்பம்
இந்தப் பாடநெறிகள் அனைத்தும் கல்லூரி வளாகத்திலேயே கற்பிக்கப்படவுள்ளன. தொழில்முகம் சார்ந்த செயல்முறை பயிற்சி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இப்பயிற்சிகள், மாணவிகள் வேலைவாய்ப்பிற்கு நேரடியாக தங்களை தயார் செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன.
இந்நிகழ்வில், புனித மேரி மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சிஸ்டர் ஜெஸ்சி பெர்னாண்டோ, லிட்டோரல் அகாடமி தலைவர் திரு. ராஜா வாஸ், துணை முதல்வர் சிஸ்டர் எழில், மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் திருமதி பத்மா பாபு ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினர். மேலும், நிகழ்வில் லிட்டோரல் அகாடமியின் கௌரவ ஆலோசகர் திரு. விவேகானந்தன் மற்றும் தென் தமிழக பிராந்திய விற்பனை பிரிவு தலைவர் சுவாமி பாக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தொழில்துறை முன்னேற்றம், வாழ்க்கைத் திறன்கள், மற்றும் சமூக பங்களிப்பு குறித்து வியாபகமான பார்வையுடன் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இவ்வாறே, வரும் வாரங்களில் பல்வேறு கல்லூரிகளில் இத்தகைய முன்னெடுப்புகளை லிட்டோரல் அகாடமி செய்ய திட்டமிட்டுள்ளது.
பிரியதர்ஷினி. ஆ