சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் விலை ஒரு லட்சம் அமெரிக்க டாலரை தாண்டிவிட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.84.72 லட்சம் ஆகும்.
இந்த ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 2 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 45% உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றது கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் தனது பிரச்சாரத்தின்போது டிஜிட்டல் சொத்துக்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு, அமெரிக்காவின் பிட்காயின் கையிருப்பைக் அதிகவும் உறுதியளித்தார்.
கிரிப்டோகரன்சி தோன்றி 16 ஆண்டுகளுக்கு மேலாக, பிட்காயின் குறித்த பல்வேறு சர்ச்சை வரலாறு இருந்தபோதிலும், பிரதானமான குதலீட்டாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டதையே இந்த விலை உயர்வு எடுத்துக்காட்டுகிறது. பெரிய முதலீட்டாளர்கள் முதல் சில்லறை முதலீட்டாளர்கள் வரை பலரும் பிட்காயினில் நேரடியாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
தற்போது, பிட்காயினின் மதிப்பு 100,000 டாலருக்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் சந்தை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கிறிஸ்மஸுக்குள் பிட்காயினின் விலை 1.2 லட்சம் டாலர்களை எட்டும் என்று நிபுணர்கள்