பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், இன்றைய வர்த்தக நேர முடிவில் 597.67 புள்ளிகள் அதிகரித்து 80,845.75 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.10 புள்ளிகள் உயர்ந்து 24,457.15 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை உயர்வை சந்தித்துள்ளது. சர்வதேச அளவில், ஆசிய சந்தைகள் ஏற்றத்தை பதிவு செய்தன. ஐரோப்பிய சந்தைகளிலும் சாதகமான போக்குகள் காணப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.238.28 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றாலும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,588.66 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எல்டி ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. கோட்டக் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
தேசிய பங்குச்சந்தையில் அதானி போர்ட்ஸ், என்டிபிசி, அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. அதே சமயம் பாரதி ஏர்டெல், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி லைஃப், சன் பார்மா ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.