நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வரும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது செயல்பாட்டிற்கு வருமென காலக்கெடு நிர்ணயிக்கக்கோரி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர்,4ஜி சேவைக்கான உபகரணங்கள் கடந்த செப்டம்பரில் இருந்து நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை 50,708 4ஜி டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதில் 41,957 தளங்கள்
செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். இந்த உபகரணங்கள் அனைத்தும் 5ஜி சேவைக்கும் மேம்படுத்தக்கூடியவை என்று தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G டவர்களை அமைப்பதற்கான பணிகளில் பிஎஸ்என்எல் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர் கூறினார்.