இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஏப்ரல் 2022-ம் ஆண்டு வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவு தொடர வேன்டுமெனில், அவை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்தது.
கட்டாய சோதனையில் தோல்வியுறும் வாகனங்களின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும், அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய ஊக்கத்தொகை வழங்குவதோடு, புதிய வாகனங்களை சலுகை விலையில் வாங்கலாம் எனவும், சாலை வரி குறைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இதன்படி சலுகைகளை அறிவித்துள்ளன. பெரும்பாலான மாநிலங்கள் இந்த கொள்கையை செயல்படுத்தவில்லை. எப்போது செயல்படுத்தப்படும் என்ற தகவலும் இல்லை.
பழைய வாகனங்களை அகற்றவும், புதிய வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கவும்,மாநில அரசுகள்ஸ்கிராப்பேஜ் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.