ரஷ்யாவின் ரயில் தேவை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – ரஷ்யா இடையே ஏற்கனவே பல வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ள நிலையில், தற்போது இந்தியாவில் ரயில் உற்பத்தியில் முதலீட்டு செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் ரயில் தேவை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ரஷ்யா மீதான தற்போதைய பொருளாதாரத் தடைகள் இந்த திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ரஷ்யாவின் ரயில் உற்பத்தி நிறுவனமான டிஎம்எச், இந்தியாவை சேர்ந்த நிறுவனமான கினெட் ரயில்வே சொல்யூஷன்ஸில் முக்கிய பங்குதாரராக உள்ளது. கினெட் நிறுவனம் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்வே பெட்டிக்கள் தயாரிப்பு மற்றும் அவற்றை 35 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் இந்திய ரயில்வேயுடன் சுமார் ரூ .55,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் ரயில் தேவையை ஒட்டி, தற்போது இரண்டு நாடுகளும் ரயில் உற்பத்தியில் விரைவில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.