உள்நாட்டின் முக்கியமான வங்கிகளின் (D-SIB) பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அடங்கும்.
உள்நாட்டின் முக்கியமான வங்கிகள் ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்படுகின்றன. எந்தவொரு தோல்வி நிதி நெருக்கடியைத் தூண்டுவதோடு, ஒட்டு மொத்த நிதி அமைப்பிற்கே பாதிப்பை ஏற்படுத்துமோ, அந்த வங்கிகள் உள்நாட்டின் முக்கிய வங்கிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
2023-ம் ஆண்டில் உள்நாட்டின் முக்கிய வங்கிகளாக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு எஸ்பிஐயும், 2016-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியும் உள்நாட்டின் சிறந்த வங்கியாக அடையாளம் காணப்பட்டது . எச்டிஎஃப்சி வங்கி 2017-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இடம் பெற்றது.
இன்றைய வர்த்தக நேர முடிவின்போது, ஐசிஐசிஐ வங்கி யின் பங்கு 0.67 சதவீதம் குறைந்து ரூ .1,262-க்கு வர்க்கமானது. எச்டிஎஃப்சி வங்கி 1.04 சதவீதம் குறைந்து ரூ .1,700.45- க்கும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 1.55 சதவீதம் சரிந்து ரூ .813.60-க்கும் வர்த்தகமானது.