கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். தாம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதிக்கு அதிக வரி விதித்தாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க எல்லைக்குள் மெக்சிகோவை சேர்ந்த புலம் பெயர்ந்தோரின் கேரவன்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 25% வரி விதித்துள்ளார்.
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும். இந்த வரி அதிகரிப்பில் இந்தியா உட்பட வேறு எந்த நாட்டின் பெயரையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை.
இந்த வரி அதிகரிப்பால், நான்கு பெரிய வர்த்தக நாடுகளை உள்ளடக்கிய $ 2 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதன் விளைவுகள் சம்பந்தப்பட்ட 4 நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.