நிலையற்ற தன்மை கொண்டதாக பார்க்கப்பட்ட க்ரிப்டோகரன்சி தற்போது தங்கத்திற்கு மாற்றான முதலீடாக பார்க்கப்படுகிறது.
அதிக ஆதரவு மற்றும் வருமானம் இருந்தாலும், பிட் காயினில் நிலையற்ற தன்மை உள்ளிட்ட சவால்கள் இருந்தன. இருந்தபோதிலும், தற்போது தங்கத்திற்கான மாற்றாக பிட்காயின் பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக, கிரிப்டோகரன்ஸிகள் விவாதத்திற்கு உரியவையாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, மக்களுக்கு கிரிப்டோகரன்ஸிகள் மீதான பார்வை மாறியுள்ளது. ஏனெனில் ட்ரம்ப் கிரிப்டோகரன்சி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அவரது சமீபத்திய கருத்துக்கள் கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துகின்றன.
பல ஆண்டுகளாக , தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கத்திற்கு எதிராகவும், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகவும் மதிக்கப்படுகிறது. பிட்காயின் ஆரம்பத்தில் ஏற்ற இறக்கம் கொண்ட சொத்தாகக் காணப்பட்டாலும், அது இப்போது தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. பாதுகாப்பான சொத்தான பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் போன்ற பாரம்பரிய சொத்துக்களுக்கு மாற்றாக பிட்காயின் மற்றும் தங்கம் இரண்டும் முதலீட்டாளர்களால் விரும்பப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்