இந்தியா – பிரிட்டன் இடையேயான பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய முக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிரிட்டன் – இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025-ம் ஆண்டில் தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான உயர்மட்ட சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. G-20 உச்சி மாநாட்டின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த ஒப்பந்தம் வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாக்குறுதிகளை கொண்டுள்ளது.
2022 ஜனவரியிலேயே இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், இரு நாடுகளிலும் தேர்தல் நடைபெற்றதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இரு பிரதமர்களும் உறுதியாக உள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
2023-24 நிலவரப்படி, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 21.34 பில்லியன் டாலரை எட்டியது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் எட்டியுள்ளது.