Institute for Economics & Peace (IEP)** அமைப்பு வெளியிட்ட “உலக அமைதிக்குறியீடு 2025” அறிக்கையில், இந்தியா 163 நாடுகளில் “115வது இடம்” பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் 116வது இடத்திலிருந்து சிறிய முன்னேற்றமாகும். இந்த குறியீடு, ஒவ்வொரு நாட்டிலும் சமூக பாதுகாப்பு, நடப்பிலுள்ள மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் போன்ற அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைதியின் நிலையை மதிப்பீடு செய்கிறது. உலக அளவில் அமைதி 0.36% குறைந்துள்ளதாகவும், இது 2008ல் அறிக்கை வெளியிடத் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த நிலையை குறிக்கிறது.
“ஐஸ்லாந்து” 17வது ஆண்டாக தொடர்ந்து உலகின் மிக அமைதியான நாடாகத் திகழ்கிறது, அதைத் தொடர்ந்து “அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து” உள்ளிட்ட நாடுகள் அமைதியானவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. மறுபுறம், “ரஷ்யா” 163வது இடத்தைப் பெற்றுள்ளது; மற்ற மிகவும் அமைதியற்ற நாடுகளில் “உக்ரைன், சூடான், டிஆர் காங்கோ மற்றும் யெமன்” ஆகியவை உள்ளன. தற்போது, உலகளவில் “59 உள்நாட்டு மோதல்கள்” நடந்து வருகின்றன, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு அதிகம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய அமைதி நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதையும், நிலைத்த அமைதி முயற்சிகள் அவசியமானவை எனவும் வலியுறுத்துகிறது.
பிரியதர்ஷினி .ஆ