ஓஎன்ஜிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓஎன்ஜிசி க்ரீன் லிமிடெட் நிறுவனமும், என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்டிபிசி க்ரீன் நிறுவனமும் கூட்டு நிறுவனமாக இணைந்து ஓஎன்ஜிசி என்டிபிசி க்ரீன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் செயல்படவுள்ளது. இதில் இரு நிறுவனங்களும் சரிபாதி பங்களிப்பை வழங்குகின்றன.
இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பாக வணிகத்தில் ஈடுபடும். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மட்டுமல்லாது கடல்காற்றின் மூலம் ஆற்றல் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறையும் இந்நிறுவனம் ஆராயும்.
கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும். விதிகளுக்கு உட்பட்டு, இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துகளை கையகப்படுத்தும் பணியையும் இந்நிறுவனம் செய்யும். இந்த கூட்டு நிறுவன முயற்சிக்கு மத்திய அரசு 19.08.2024 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், என்டிபிசி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான என்டிபிசி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஐபிஓ நாளை தொடங்கவுள்ளது. என்டிபிசி க்ரீன் எனர்ஜி ரூ. 10,000 கோடி மதிப்புள்ள ஐபிஓவை நாளை வெளியிடவுள்ளது.