இந்திய அரசு தற்போது அனைத்து துறைகளிலும் இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST – UTC+5:30) மட்டுமே சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் நேரமாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. வங்கிகள், பங்கு பரிவர்த்தனை நிலையங்கள், SEBI ஒழுங்கு விதிகள் உட்பட்ட நிறுவனங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்பு துறைகள் அனைத்தும் GPS அடிப்படையிலான நேரம் போன்ற மாற்று நேர அமைப்புகளை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நேரச் சார்ந்த பரிவர்த்தனை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
இந்தியாவில் Daylight Saving Time (DST) என்பது நடைமுறையில் இல்லை மற்றும் IST ஆண்டு முழுவதும் மாறாமல் நிலைத்து உள்ளது. இந்த நடவடிக்கை மூலம், நேர அடிப்படையிலான கணக்கீடுகள், ஒப்பந்தங்கள், மற்றும் தகவல் பரிமாற்றங்களில் துல்லியமும் ஒழுங்குமுறையும் நிலைநிறுத்தப்படும். இதனால், நிதி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சட்ட துறைகளில் செயல்திறனும் நம்பகத்தன்மையும் மேம்படும் என அரசு நம்புகிறது.
பிரியதர்ஷினி .ஆ