ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரி 1 முதல் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் பார்த்துக்கொள்வதே தங்களது நோக்கம் என ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை ஈடுகட்ட சிறிய அளவில் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டதென ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைகள் எவ்வளவு உயரும்?
2025-ம் ஆண்டு வெளியான அனைத்து மாடல்களிலும் ரூ.25,000 வரை விலை உயர்த்தப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, டஸ்கான் மற்றும் i30 செடான் போன்றவற்றின் விலை உயரும்.
நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் கார்களின் உள்நாட்டு விற்பனை 48,246 ஆகவும், ஏற்றுமதி 13,006 ஆகவும் இருந்தது. ஒட்டு மொத்தமாக ஹூண்டாய் கார்களின் விற்பனை நவம்பர் மாதத்தில் கடந்த மாதத்தை விட7 சதவீதம் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது