டவர் நிறுவனமான இண்டஸ் டவர்ஸில் தனக்கு மீதமுள்ள 3 சதவீத பங்குகளை விற்க வோடபோன் குழுமம் முடிவு செய்துள்ளது.
தனது இந்திய சொத்துக்களின் மீதுள்ள சுமார் $101 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக இந்த பங்குகளை விற்பதாக லண்டன் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், வோடபோன் இண்டஸ் டவர்ஸில் தனக்கு இருந்த 484.7 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதாக வோடபோன் நிறுவனம் அறிவித்தது. இது இண்டஸ் டவர்ஸின் பங்கில் 18 சதவீதம் ஆகும். இதன் மூலம் திரட்டப்பட்ட 1.7 பில்லியன் யூரோக்கள் வோடஃபோனின் இந்திய சொத்துக்கள் மீது வங்கியில் நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டது.
தற்போது வோடாஃபோன் நிறுவனம் தனது மீதமுள்ள 3 சதவீதம் பங்குகளான 79.2 மில்லியன் பங்குகளை விற்று, 101 மில்லியன் டாலர் நிதி திரட்டவுள்ளதாக லண்டன் பங்குச் சந்தையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.