இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பரிவர்த்தனைக்கான வரம்பை ரூ .1,000 லிருந்து ரூ .5,000 ஆக உயர்த்தியுள்ளது.
யுபிஐ லைட் என்பது இணைய வசதியின்றி கடவுச்சொல் (பாஸ்வேர்டு) இல்லாமல் நேரடியாக பரிவர்த்தனை செய்யும் முறை ஆகும். இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து வாலட்டில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மொபைல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டில் ரூ.5000 வைத்திருப்பதோடு, UPI பின் இல்லாமல் ரூ.1000 செலுத்த முடியும்.
கூகுள்பே, போன்பே போன்ற பல செயலிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ லைட் சேவையை வழங்குகின்றன. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் யுபிஐ இயங்குதளம் மூலம் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. மதிப்பின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் ரூ.21.55 டிரில்லியனாக உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.