முத்தூட் மைக்ரோஃபின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நுண்நிதி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதமும், மூன்றாம் தரப்பு பொருட்களை வாங்குவதற்கான கடனுக்கான வட்டி விகிதங்களை 1.25 சதவீதமும் குறைத்துள்ளது.
அதன்படி, வருமானம் ஈட்டும் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 23.05% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் ஒரு அங்கமான முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனம், மூன்றாவது முறையாக கட்டணத்தை குறைத்துள்ளது. மூன்றாம் தரப்பு தயாரிப்புகளை வாங்குவதற்கான சில்லறை பாதுகாப்பற்ற கடன்களுக்கான புதிய வட்டி விகிதம் 22.7% முதல் 23.7% வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதமே முத்தூட் மைக்ரோஃபின் கட்டணங்களை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் நேற்றைய தேதிக்கு பிறகு வாங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் செல்லுபடியாகும்.
முத்தூட் மைக்ரோஃபின் இதே ஆண்டில் 3-வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.