இணைய வர்த்தக நிறுவனங்கள் தங்களது தளங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
.
ஆன்லைனில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், கடந்த மாதம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இணைய வர்த்தக நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விநியோக ஊழியர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக கொண்டு செல்வது, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் முறையான சுத்திகரிப்பு நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து விநியோக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக் வகையில், காலாவதி தேதிக்கு 45 நாட்களுக்கு முன்னரே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.