புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 98.% வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 மே 19 அன்று ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2024 நவம்பர் 29 அன்று ரூ.6,839 கோடி ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்படி, புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகளில் 98.08% திருப்பித் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7-ம் தேதி வரை அனைத்து வங்கிக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் மற்றும் அல்லது மாற்றுவதற்கான வசதி அனுமதிக்கப்பட்டது. தற்போதும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், பெங்களூரு, , போபால், புவனேஸ்வர், சண்டிகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பாட்னா மற்றும் திருவனந்தபுரம் உள்பட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில்
ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
அதேபோல், நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ .2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.