இஸ்ரேல் ராணுவம் மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை காஸா மக்களின் மீது பயன்படுத்துவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் காஸாவின் வடக்கு பகுதியில் பெயரறியாத ஆயுதங்களை மக்களின் மீது பயன்படுத்துவதாகவும் , அந்த ஆயுதத்தை பயன்படுத்தினால் அது மனித உடல்களை ஆவியாக்கிவிடுவதாகவும் காஸா சுகாதாரத்துறை இயக்குநர் முனிர் அல்-புர்ஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் காஸா மக்கள் மீதும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இஸ்ரேல் பயன்படுத்தி வரும் ஆயுதங்கள் குறித்தும், காஸா மக்கள் மீது அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன அமைப்பான ஹமாஸும், இஸ்ரேல் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றதா என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் சுமார் 2000 உடல்களை காணவில்லை என்றும், இந்த உடல்கள் யாவும் ஆயுதங்களைக்கொண்டு ஆவியாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.