வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா 2024 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது வங்கி விதிமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் வங்கி கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவை 2023-24 மத்திய பட்ஜெட்டின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1955 உள்ளிட்ட முக்கிய சட்டங்களில் இந்த மசோதா திருத்தங்களை முன்மொழிகிறது.
இந்த மசோதாவின் படி, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளுக்கு நான்கு நபர்களை பிரதிநிதிகளாக நியமிக்கலாம். தற்போது ஒருவரை மட்டுமே பிரதிநிதியாக நியமிக்கலாம். கொரோனா தொற்றின்போது வாடிக்கையாளரின் மரணத்திற்கு பிறகு நிதி விநியோகிப்பதில் சிரமம் எழுந்த நிலையில், அதனை சரிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கிகளின் இயக்குனர் வட்டியை மறுவரையறை செய்வதன வரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.